IVF என்றால் என்ன?
IVF என்பது Invitro fertilization. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் நாள்முதல் ஹார்மோன்ஸ் சரிவிகிதப்படுத்தப்படுகிறது. பல கருமுட்டைகளை உருவாக்குவதற்கு சில ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன. இந்த கருமுட்டையின் வளர்ச்சி Ultra Sound Scan மூலம் கண்டறியப்படுகிறது. குறிப்பிட்ட நாளில் கருமுட்டையின் வளர்ச்சியை பார்த்து Ultra Sound Scan மூலம் Aspirate Needle கொண்டு வெளியே எடுக்கப்படுகின்றன. எடுக்கப்பட்ட கருமுட்டைகளுடன் 10,000 முதல் 50,000 தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண் உயிரணுக்களுடன் கருகூடத்தில் வளர்க்கப்படுகின்றன. அதில் ஏதேனும் ஒரு விந்தணு முட்டையை துளைத்து சென்று கருவை உருவாக்கும். இது கருகூடத்தில் 3 நாள் அல்லது 5 நாட்கள் வளர்க்கப்பட்டு பின் பெண்ணின் கர்ப்பபையிலும் முறையான இடத்தில் வைக்கப்படுகின்றன. இதன் மூலம் 30 சதவீதம் முதல் 40 சவீதம் குழந்தை உருவாகும் வாய்ப்புள்ளது. அதிக முட்டைகளையும், அதிக விந்தணுக்களையும் கொண்டு இந்த IVF சிகிச்சை பண்ணப்படுகின்றன.
IUI என்றால் என்ன?
IUI என்பது Intra uteriene Insemination. இதில் இயற்கையாக கருத்தரிக்காமல் இருப்பவர்களும், கருக்குழாய்களில் இரண்டு பக்கம் அடைப்பு இல்லாதவர்களும், ஒரு பக்கம் அடைப்பு ஏற்பட்டவர்களும் இந்த IUI முறையை பின்பற்றலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் 2-வது நாளிலிருந்து 6-வது நாள்வரை hormones மாத்திரைகளாலும், பின்னர் ஊசிகளாலும் சிறந்த கருமுட்டைகளை வளர செய்து Ovulation timing அன்று UltraSoundScan மூலம் கருமுட்டையின் வளர்ச்சியை பார்த்து குறிப்பிட்ட நாளில் ஆண்களின் விந்தணுக்களை எடுத்து சுத்திகரிக்கப்பட்டு வீரியமூட்டப்பட்டு அதிவேகமாக நகர கூடிய விந்தணுவை பெண் கர்ப்பபையினுள் செலுத்துவது IUI ஆகும்.
ICSI என்றால் என்ன?
ICSI என்பது In Cytoplasmic Sperm Injection. இந்த சிகிச்சை மிகவும் நவீன முறையாகும். குறைந்த விந்தணுக்களையும், குறைந்த முட்டைகளையும் கொண்டு செய்யப்படும் முறையாகும். IVF போன்றே இதுவும் மாதவிடாய் காலத்தில் இரண்டாவது நாளிலிருந்து ஹார்மோன் ஊசிகள் போடப்பட்டு சினை பையில் உள்ள முட்டைகளின் வளர்ச்சி தூண்டப்படுகின்றன. பல கருமுட்டைகளை உருவாக்கிய பின் Ultra Sound Scan மூலம் Aspirate Needle கொண்டு கருமுட்டைகளை வெளியே எடுக்கின்றனர். ஒரு ஆண் உயிரணுவை ஒரு ஊசியின் மூலம் எடுத்து கொண்டு பெண்ணின் ஒரு கருமுட்டைக்குள்ளேயே நேரடியாக செலுத்தி கருவை உருவாக்க செய்கின்றன.இவற்றை ஒரு தாயின் கர்ப்பபையில் இயற்கையான முறையில் கரு உருவாகி வளர்வதற்கு என்ன தட்பவெப்ப சூழ்நிலைகள் உள்ளனவோ அதேபோன்று அதிநவீன செயற்கை கூடத்தில் CO2, உதவியுடனும் Incubator-ல் பரிசுத்தமான சூழ்நிலையில் 3 நாள் அல்லது 5 நாள் பாதுகாப்பாகவும், கவனமாகவும் வளர்க்கப்பட்டு அதன்பின் பெண்ணின் கர்ப்பபையினுள் Ultra Sound Scan உதவியுடன் செலுத்தப்படுகின்றன.
இதுவே ICSI முறையாகும். இதில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குழந்தை வாய்ப்பினை பெற வழியுள்ளது.
Cryopreservation என்றால் என்ன?
விந்தணுக்கள் மற்றும் கருமுட்டைகள் உறைநிலைப்படுத்துதல் ஆகும். LN2 (Liquid Nitrogen) இவற்றை கொண்டு விந்தணுக்கள் + முட்டைகள் + கருமுட்டைகள் ஆகியவற்றை 5 டிகிரி செல்சியஸ் உறைநிலையில் பதப்படுத்தப்படுகின்றன. சில வருடங்கள் சேமித்த நிலையில் அதன் வீரியம் குறையாமல் நிலை மாறாமல் அப்படியே இருக்கும்.
திருமணமாகி குழந்தையின்மை என்ற காரணத்திற்காக எத்தனை வருடங்களுக்கு பிறகு மருத்துவரை அணுக வேண்டும்?
குழந்தையின்மை என்பது திருமணமாகி ஓராண்டுகளாகியும் கணவன் மனைவி சேர்ந்திருந்து கருத்தரிக்காவிட்டாலும், 35 வயதிற்கு மேற்பட்டவர்களும் பலமுறை கருத்தரித்தும் கரு தங்காமல் இருப்பது குழந்தையின்மை ஆகும். திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் கருத்தரிக்கவில்லை யென்றால் மருத்துவரின் ஆலோசனையை அணுக வேண்டும்.
குழந்தையின்மை என்ற குறைபாடு அதிகபட்சம் யாருக்கு வரும் அதன் முக்கிய காரணங்கள் யாவை?
குழந்தையின்மை என்பது இருபாலருக்கும் பொதுவானதாகும்.இதில் பெண்களுக்கு 30 சதவீத குழந்தையின்மைக்கான காரணமாக உள்ளது. அதேபோல் ஆண்களுக்கு 30 சதவீத காரணமாக உள்ளது. பொதுவாக ஆண், பெண் இருவருக்கும் தாம்பத்திய உறவு சிறப்பாக இருக்க வேண்டும்.
அதிக எடையின் காரணமாக இருக்கலாம். அதிக வயதின் காரணமாகவும் இருக்கலாம். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட வியாதிகள், ஆண்களுக்கு புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றால் ஏற்படும் விந்தணு குறைபாடுகள், ஆண்களுக்கு விந்தணு வெளிவரும் அல்லது உருவாகும் குழாய்களில் அடைப்பு ஏற்படுதல், பெண்களுக்கு கருமுட்டை உருவாக்கம் குறைதல் ஆகியவை குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
குழந்தையின்மைக்கான ஏதேனும் சிறப்பு சிகிச்சை முறைகள் உள்ளனவா?
கர்ப்பப்பையினுள் வீரியமூட்ட விந்தணுக்களை செலுத்துதல் முறை (IUI )Intra uterience Insemination. சோதனை குழாய் குழந்தை (IVF) Invitro Fertilization. அதிநவீன சிகிச்சை முறை (ICSI) In cytoplasmic Sperm Injection. கருமுட்டை உருவாக்கத்தில் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு முட்டை தானம் பெறுதல் (Donor Oocyte). ஆண்மை குறைவு விந்தணு குறைபாடு உள்ளவர்களுக்கு கருமுட்டை தானம் பெறுதல் (Donor Sperms). அதிக வயதானோருக்கும் விந்தணு , கருமுட்டைகள் தானம் பெறுதல் (Donor Embroyes). விந்தணு, கருமுட்டைகள் பதப்படுத்துதல் (cryopreservation). கருத்தங்குவதற்கு பலகீனமான கர்ப்பபை உள்ளவர்களுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பெற செய்தல் (Surrogacy) ஆகிய நவீன சிகிச்சை முறைகளை கொண்டு எளியதாக மகப்பேறு பெறும் பாக்கியம் அடையலாம்.